நடிகர் சித்ரா லட்சுமணன் பல்வேறு பிரபலங்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சி “சாய் வித் சித்ரா”. இவர் சமீபத்தில் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் உடன் நடத்திய நிகழ்ச்சியில் பெருமளவில் பேசும்படியானது.
அதற்கு முக்கிய காரணம் தல, தளபதி பற்றி இவர் சுப்புராஜிடம் எழுப்பிய கேள்விகள் தானாம்.
தல அஜித்துடன் மங்காத்தா, தளபதி விஜயுடன் தலைவா படங்களில் நடித்தவர் சுப்பு பஞ்சு அருணாச்சலம். இவர் இருவேறு படப்பிடிப்பு தளங்களில் நடந்த சம்பவங்களை சித்ராவிடம் பகிர்ந்துள்ளார்.

அதாவது தலைவா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரியலாக செய்யப்பட்ட ஸ்டண்ட் ஒன்று தவறுதலாக நடந்து சுப்பு பஞ்சு அருணாச்சலம் அடிபட்டுவிடவே விஜய் உட்பட மொத்த டீமும் ஓடி வந்து உதவியதாம்.
மேலும் விஜயுடன் நடிக்கும் இன்னொரு காட்சிக்காக விஜய் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டாராம். அதன்படி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவிடம் இவரது உடல்நிலையை குறிப்பிட்டு பாதுகாப்பு உபகரணங்களோடு பணியாற்ற வைத்தாராம்.
பெரும்பாலும் சைவ உணவு எடுத்துக்கொள்ளும் சுப்பு பஞ்சு அருணாச்சலம் மங்காத்தா படத்தின் பாங்காங் படப்பிடிப்பிற்கு சென்ற போது படத்தின் ஒரு காட்சியில் சிக்கன் சாப்பிடுவாராம்.
சாப்பிட்டதும் ஃபுட் அலர்ஜி ஆகவே சட்டென சுதாரித்த சுப்பு பஞ்சு அருணாச்சலம் வெங்கட் பிரபுவிடம் ஷாட் உடனே எடுக்கும் படி கூறினாரும். விடயமறிந்த “தல”யும் அவருக்கு எடுத்துவிடுங்கள் பிறகு எனது ஷாட்டை எடுத்து இணைக்கலாம் என்றாராம்.
இப்படியாக தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் இருவரும் சாதரணமாக கவனித்தது அவரை வியப்பில் ஆழ்த்தியதாகவும். இன்று வரை அவர்கள் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் கூறுகிறார்.