வந்த புதிதில ஹட்ரிக் ஹிட் கொடுத்து கொடி கட்டி பறந்தவர் ஜெயம் ரவி. தன்னுடைய அண்ணனால் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் விரல் விட்டு அளவில்தான் இவருக்கு ஒரு சில வெற்றி படங்கள் அமைந்துள்ளது
எம் குமரன், ஜெயம், உனக்கும் எனக்கும், என்று ஹிட் கொடுத்த அசத்தியவருக்கு இப்பொழுது சினிமாவில் டல் டைம் தான். கடைசியாக அவருக்கு ஹிட் படமாக அமைந்தது என்றால் அது பிரதீப் ரங்கநாதனின் கோமாளி படம் தான். அதுவும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது.
அதன் பின் நடித்த படங்களான பூமி, அகிலன், இறைவன் சைரன், பிரதர் என எல்லா படங்களும் இவருக்கு அட்டர் பிலாப் ஆனது. அதுமட்டுமின்றி அவருடைய திருமண வாழ்க்கையும் சரியில்லை. விவாகரத்து வரை சென்று விட்டது. இப்படி இரண்டு பக்கமும் மத்தளம் போல் அடி வாங்கிக் கொண்டிருந்தார் ஜெயம் ரவி.
இப்பொழுது ஜெயம் ரவி தன் பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இனிமேலாவது இந்த பெயர் ராசி அவருக்கு எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.தற்சமயம் ஜெயம் ரவியை போலவே மற்றொரு வாரிசு நடிகரும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.
நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தன் பெயரை கௌதம் ராம் கார்த்திக் என்று மாற்றிக் கொண்டார். இந்த பெயர் மாற்றம் இவருக்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்து வருகிறது. மிஸ்டர் EX, என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுபோக கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றும் நடித்து வருகிறார்.ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணவத்துடன் ஒரு படத்தில் ஜோடி போடுகிறார். இப்படி சீக்ரெட்டாக பல படங்களில் வேலை செய்து வருகிறார்.