கெத்தை விட்டுக்கொடுத்த சுதா கொங்கரா.. பாலா படத்தில் செய்யும் வேலை

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றிப் படங்களை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவருடைய இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு ஆசை இருக்கிறது.

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்த இவர் தற்போது கைநிறைய ஸ்கிரிப்டுகளை அடுக்கி வைத்து இருக்கிறாராம். அதில் அவர் அஜித்துக்காக ஸ்பெஷலாக ஒரு ஸ்கிரிப்டையும் தயார் செய்து வைத்துள்ளாராம்.

இந்த நிலையில்தான் இவர் தற்போது பாலா இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார். பாலா நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போகிறார். இதற்கான வேலைகள் அனைத்தும் ஆரம்பமான நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.

இதற்காக மதுரையில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு அங்கு சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் இப்படத்தில் அதர்வா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

இந்த கூட்டணியில் தான் சுதா கொங்கரா நிர்வாக தயாரிப்பாளர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக அவர் சினிமாத் துறையில் ஒரு கெத்தை மெயின்டன் செய்து வருபவர். ஆனால் அவர் பாலாவுக்காக அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் கூட அவர் இப்படி வேலை செய்துள்ளார். இதன் மூலம் அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், பிற்காலத்தில் சொந்தப் படம் எடுக்கும்போது அது தமக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.