மீண்டும் பயோபிக் கதையை கையிலெடுத்த சுதா கொங்கரா.. ரத்தன் டாட்டாவாக மாறப்போகும் நடிகர்

இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்து இருக்கிறார். பல விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற அவர் அப்படத்தை தற்போது ஹிந்தியில் படமாக்கி கொண்டிருக்கிறார்.

இதை அடுத்து அவர் மீண்டும் தமிழுக்கு எப்போது வருவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் அவர் அடுத்ததாக பிசினஸ் மேக்னட் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

Also read: சூர்யாவுடன் இருக்கும் பிரச்சனையை பொது இடத்தில் உறுதிசெய்த பாலா.. வணங்கான் பட நிலைமை இதுதான்!

ஏற்கனவே இவர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தான் சூரரைப் போற்று படமாக எடுத்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஒரு பயோபிக் கதையை அவர் கையில் எடுத்துள்ளார். அவரின் முந்தைய திரைப்படத்தை காட்டிலும் இந்த பயோபிக் கதைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் தான் இந்த ரத்தன் டாட்டா.

அப்படிப்பட்ட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியான இவருடைய வாழ்க்கை திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்று ஆர்வமும் அனைவருக்கும் தொற்றியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவர்களின் பெயரும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Also read: போதைக்கு அடிமையாகி மார்க்கெட்டை இழந்த சூர்யா பட வில்லன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான்

இதில் ஏற்கனவே சூர்யா, சுதா கொங்கராவ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் இவர்களின் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த கூட்டணி இணையும் பட்சத்தில் நிச்சயம் சூர்யா தான் இப்படத்தையும் தயாரிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே சுதா கொங்கரா தன் கனவு திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

அதனால் இந்த கூட்டணி விரைவில் உறுதியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர். இருப்பினும் அபிஷேக் பச்சனும் ஒரு சாய்ஸாக இருக்கின்றார். தற்போது இப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Also read: அடுத்த தேசிய விருதுக்கு ரெடியாகும் சூர்யா.. மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி