நிதானமாக கணக்கு போட்டு அடிக்கும் சன் பிக்சர்ஸ்.. அட்லி, அல்லு அர்ஜுன் கூட்டணியில் இவ்வளவு அரசியலா?

மற்ற நிறுவனங்கள் போல் இல்லாமல் சரியான வியாபார தந்திரியாக வலம் வருபவர்கள் சன் பிக்சர்ஸ். இன்று அவர்கள் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். இது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகப் போகிறது. பான் இந்தியா படத்தையும் தாண்டி பான் வேர்ல்ட் படமாக உருவாக இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த படத்திற்கு முதலில் விஜய் தான் கால்ஷீட் கொடுத்திருந்தார். சர்கார் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே இது முடிவாகி இருந்தது.. அப்பொழுதே ஒரு நிகழ்ச்சியில் கலாநிதி மாறன் இந்த கூட்டணியை பற்றி தெரிவித்து இருந்தார். அதன் பின் அட்லி ஜவான் படம் இயக்க சென்று விட்டார்

ஜவான் படம் இயக்கிக் கொண்டு இருந்த நேரத்தில் கொரோனா வந்ததால் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் விஜய், அட்லீ சன் பிக்சர்ஸ் கூட்டணி ஒன்று சேராமல் தள்ளிப்போனது. அதன் பின் விஜய் அரசியலுக்கு அடித்தளம் போட்டதால் இந்த கூட்டணி நிறைவேறாமலே போனது. அதனால் இந்த ப்ராஜெக்ட்டில் அல்லு அர்ஜுன் சேர்த்து விட்டார்.

எடுத்தோம் கவுத்தோம் என்று சன் பிக்சர்ஸ் இதில் இறங்கவில்லை, மாறாக அட்லி இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடி வசூலை பார்த்தது. அதை போல் சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு வெளிவந்த புஷ்பா 2 படம் 1200 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்தது. இதனால் தான் சன் பிக்சர்ஸ் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் இந்த ப்ராஜெக்ட்டும் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் முடிவாகியுள்ளது. முதலில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி சம்பளம் அதிகமாக இருக்கிறது என இழுத்தடித்து வந்தது சன் பிக்சர்ஸ். இப்பொழுது இதில் அட்லிக்கு 100 கோடிகளும் அல்லு அர்ஜுனுக்கு 250 கோடிகளும், படத்தின் பட்ஜெட்டாக 600 கோடிகளும் நிர்ணயித்து உள்ளார் கலாநிதி மாறன்.