விஜய்யோட படம்தான் என்னை இயக்குனரா மாத்துச்சு.. சுந்தர் சி open talk

Sundar C : இயக்குனர் சுந்தர் சி அவர்கள் ஒரு தலை சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல நடிகரும் ஆவார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல கதைகளை முன்னெடுத்து மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் சுந்தர் சி என்றாலே பேய் படம் எடுப்பதில் வல்லவர் என்ற பெயரையும் இப்போது அவர் எடுத்துள்ளார். ஆமா நல்ல கதையை மையமாக கொண்ட பேய் படங்கள் எடுப்பதில் பேர் போனவர்.

இவர் தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில் சுவாரசியமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இவர் இயக்குனர் ஆன காலகட்டத்தில் படத்தை வெளியிடுவதற்கு முன்பு தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

இன்று நான் நிலைத்திருப்பதற்கு காரணம் விஜய்..

அப்போது இவர் அந்த படத்தை பார்த்துவிட்டு சுமாராகத்தான் இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு படம் ஓடாது என்றும் நினைத்துக் கொண்டு வந்து விட்டார். ஓடும் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் அந்த படம் வெளிவந்து முதல் நாளிலிருந்து நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது.

ஒரு சின்ன தியேட்டரில் இருந்து ஒரு ஷோ இரண்டு ஷோவாக மாறியது, அடுத்த மூன்று ஷோவாக வந்து தியேட்டரில் திரையிடப்பட்டது. நானும் பைத்தியம் பிடித்தது போல் அத்தனை ஷோக்களையும் திரும்பத் திரும்ப பார்த்தேன். எந்த ஒரு ஷோலையுமே ஆடியன்ஸ் கைத்தட்டல் குறையவில்லை.

அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. நமக்கு பிடித்த கதையை எடுத்தால் படம் ஓடாது. மக்களுக்கு பிடித்தவாறு படத்தை எடுத்தால் படம் ஓடும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த படம் என்னவென்றால் தளபதி விஜய் அவர்கள் நடித்த ரசிகன் என்று கூறியுள்ளார்.

இன்று நான் இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கும் நிறைய படங்கள் இயக்கியதற்கும் காரணமே நான் தளபதி விஜய் அவர்களின் ரசிகன் படம் பார்த்து கற்றுக் கொண்ட பாடம்தான் என்று விஜய் அவர்களை புகழ்ந்து பேசி உள்ளார் இயக்குனர் சுந்தர் சி.