தயாரிப்பாளர் கொடுத்த கிப்ட்.. ஏற்க மறுத்த சுந்தர் சி

Sundar C : சுந்தர் சி-யின் அரண்மனை 4 மற்றும் மதகஜ ராஜா படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை அடுத்து சமீபத்தில் சுந்தர் சி, வடிவேலு ஆகியோரின் காம்போவில் வெளியாகி இருந்தது கேங்கர்ஸ் படம்.

இந்த படம் ஓரளவு நல்ல வசூலை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கேங்கர்ஸ் படம் பெரிய வரவேற்பை பெறும் என சுந்தர் சிக்கு ஒரு கிப்ட் கொடுத்திருந்தார்.

அதாவது குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் ஒரு பேக்கேஜை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதை சுந்தர் சி ஏற்க மறுத்து விட்டாராம். ஏனென்றால் கேங்கர்ஸ் படம் பெரிய லாபம் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் எங்கு தப்பு செய்தோம் என்று ஆராய்ச்சி செய்து வருகிறாராம்.

தயாரிப்பாளர் கொடுத்த பரிசு ஏற்க மறுத்த சுந்தர் சி

அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என மூக்குத்தி அம்மன் 2 ஸ்கிரிப்ட் வேலையில் இறங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே ஒன்பதாம் தேதி தொடங்க இருக்கிறதாம்.

அதற்காக சுந்தர் சி மற்றும் மூக்குத்தி அம்மன் 2 படக்குழு ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர். ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் சுந்தர் சி என நினைத்த நிலையில் கேங்கர்ஸ் கலவையான விமர்சனத்தால் சறுக்களை சந்தித்துள்ளது.

ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மூலம் மீண்டும் சுந்தர் சி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் ஐசாரி கணேஷ் தயாரிக்கிறார்.