நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பழைய படம் ஒன்றை இயக்குனர் சுந்தர் சி தற்போது தூசி தட்டி எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காபி வித் காதல் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
அதைத்தொடர்ந்து அவருடைய கனவு திரைப்படமான சங்கமித்ராவையும் அவர் ஆரம்பிக்க இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு சுந்தர் சி, ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து சங்கமித்ரா என்ற வரலாற்று கதையை எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அது சம்பந்தப்பட்ட போஸ்டர்களும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அறிவிப்பு வந்த பிறகு இந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தது. அதனால் இந்த படம் கைவிடப்பட்டதாக பலரும் முடிவுக்கு வந்தனர். ஆனால் சுந்தர் சி இந்த படத்திற்கான கிராபிக்ஸ் மற்றும் டெக்னிக்கல் வேலைகள் மிகவும் சிரமமானது என்றும், அதற்கு சில காலதாமதங்கள் ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்த பிறகும் கூட அந்த படம் பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் சுந்தர் சி தற்போது சங்கமித்ரா திரைப்படத்தை எடுக்கப் போவதாக அறிவித்துவிட்டார். எட்டாம் நூற்றாண்டில் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது.
இவ்வளவு காலம் இல்லாமல் சுந்தர் சி இப்போது திடீரென இந்த படத்தை ஆரம்பிப்பதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிரி புதிரி வெற்றி அடைந்துள்ளது. நம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அப்படம் உலகம் எங்கும் அமோக ஆதரவை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை பார்த்து தான் சுந்தர் சி சங்கமித்ராவை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார். பல வருடங்களாக முடியாது என்று ஒதுக்கப்பட்டு இருந்த இந்தப் படம் மணிரத்னத்தால் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் மணிரத்தினம் பற்ற வைத்த நெருப்பு நன்றாகவே வேலை செய்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை போலவே இந்த சங்கமித்ராவையும் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.