மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

இயக்குனர் சுந்தர் சிக்கு சமீபகாலமாக இயக்கிய படங்கள் எல்லாம் தொடர் தோல்வியை தழுவியது. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படம் வந்த சுவடே தெரியவில்லை. இதனால் ஹிட் பட வரிசையில் அரண்மனை 4 படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் உள்ள அரண்மனை படத்தைப் போல இதில் எடுக்க வேண்டாம் என வித்தியாசம் காட்ட இருக்கிறார். அதாவது நான்காவது பாகத்திற்காக பல புதிய முயற்சிகளை சுந்தர் சி மெனக்கெட்டு செய்து வருகிறாராம். இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதியை ஹீரோவாக போடலாம் என்று யோசித்தார்.

ஆனால் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். ஆகையால் சுந்தர் சியே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு எடுத்து இருக்கிறாராம். எப்போதுமே சுந்தர் சி யின் படத்தில் நிறைய கதாநாயகிகள் நடிப்பது வழக்கமாக உள்ளது.

அதேபோல் அரண்மனை 2 படத்தில் தற்சமயம் இரண்டு ஹீரோயின்களை சுந்தர் சி புக் செய்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ராசி கன்னா நடிக்கிறார். மேலும் மற்றொன்றில் தமன்னா நடிக்கிறாராம். தமன்னாவுக்கு இப்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை.

இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு தமன்னா விட்ட மார்க்கெட் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். இந்தச் சமயத்தில் அரண்மனை 4 படத்தில் சந்தோஷ் பிரதாப்-க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

சந்தோஷ் பிரதாப் இப்போது தான் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். சமீபத்தில் கூட அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் சிறந்த நடிப்பை சந்தோஷ பிரதாப் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னா இப்போது சின்ன நடிகர் உடன் சேர்ந்து நடிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.