சன்னி லியோனின் நடத்தையை விமர்சித்த ரோஜா.. தக்க பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த சம்பவம்

Roja, Sunny Leone: துணிச்சலான நடிகை ரோஜா ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்தது. கல்யாணத்திற்கு பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட ரோஜா மீண்டும் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார் ரோஜா. சமீபத்தில் வர உள்ள தேர்தலுக்காக பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதில் பவன் கல்யாண் ஒருபுறம் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை விமர்சிக்கும் விதமாக ரோஜா இவர் முதலமைச்சருக்கு பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அதாவது சன்னி லியோனுக்கு ஒழுக்கத்தை வேதம் ஓதுவது போல் இவர் பேசிக் கொண்டிருக்கிறார் என நக்கல் அடித்து இருந்தார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து கவர்ச்சியின் நடிகை சன்னி லியோன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

அதாவது சன்னி லியோன் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்த பிரபலம் ஆனாலும் இப்போது தனது திறமைக்கான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். இந்த சூழலில் ரோஜாவுக்கு எதிராக சன்னி லியோன், நான் எதை செய்தாலும் வெளிப்படையாக செய்து வருகிறேன். உங்களைப் போல் இல்லை அதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என நெத்தியடி பதிலை கொடுத்திருக்கிறார்.

அதாவது கவர்ச்சியாக நடித்தால் அவர்கள் தவறானவர்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவ்வாறு நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி சன்னி லியோன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவ்வாறு நிஜத்தில் அவர் மிகவும் நல்ல குணாதிசயம் கொண்டவர்.

இப்படிப்பட்ட ஒருவரை மேடையில் அநாகரிகமாக ரோஜா பேசியது கண்டிக்கத்தக்கது என பலரும் போர் கொடி தூக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ரோஜாவும் அரசியலுக்கு வருவதற்கு முன் நடிகையாக இருந்தவர் தான். சினிமாவில் நடக்கும் எல்லாமே தெரிந்தும் அவர் இப்படி பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

sunny-leone
sunny-leone