Jailer 2: சூப்பர் ஸ்டார் நடிப்பில் கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. அதில் கூலி பட சூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது.
ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் இறுதி கட்ட பணிகளை லோகேஷ் செய்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஜெயிலர் 2 ஷூட்டிங் கேரளா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
இதன் முதல் பாகத்தில் சிவராஜ்குமார் மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். அதையடுத்து இரண்டாம் பாகத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் பாலைய்யா இணைந்துள்ளார்.
முதல் பாகத்திலேயே இவரை நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது அமையவில்லை. அதை அடுத்து இரண்டாம் பாகத்தில் அவர் சூப்பர் ஸ்டாருக்காக சம்மதித்திருக்கிறார்.
கேமியோ ரோலுக்கு இத்தனை கோடி சம்பளமா.!
சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. அதில் தற்போது பாலைய்யா வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.
இதில் அவர் கதாபாத்திரம் சற்று நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலாக இருக்கிறது. அதற்காக அவர் 50 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார்.
இத்தனைக்கும் அவருடைய கால்ஷீட் தேதிகள் 20 நாட்கள் மட்டுமே. அதற்கு இவ்வளவு சம்பளம் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதற்கு சம்மதித்துள்ளனர்.
இதுதான் தற்போது சோசியல் மீடியா பரபரப்பு செய்தியாக இருக்கிறது. தெலுங்கில் கூட அவர் இவ்வளவு சம்பளம் வாங்கி இருக்க மாட்டார் போல.
ஷாருக்கான் வந்து நடித்திருந்தால் கூட இவ்வளவு தொகையை கேட்டிருக்க மாட்டார். 20 நாளுக்கு 50 கோடியா என நெட்டிசன்கள் வாய் பிளக்காத குறை தான்.
ஆனாலும் அவர் வரும் காட்சிகள் நிச்சயம் தியேட்டரை அதிர வைக்கும் என்கின்றனர். இருந்தாலும் இத்தனை கோடி சம்பளம் கொஞ்சம் அதிகம் தான்.
தயாரிப்பு நிறுவனமே கொடுக்கும் போது நமக்கு என்ன வந்துச்சு என விஷயத்தை கேள்வி பட்டவர்கள் சத்தம் இல்லாமல் நகர்கின்றனர்.