ரஜினியை காக்க வைத்து வேடிக்கை பார்த்த வடிவேலு.. புகழ் போதையில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா!

Super Star Rajini: வடிவேலு உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த மாமன்னன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நிறைய படங்களில் காமெடியனாகவே பார்த்த வடிவேலுவை இந்த படத்தில் சீரியஸாக பார்ப்பதற்கே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இதனால் பல வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த வடிவேலுக்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் நல்ல காலம் பொறந்திருச்சு என நம்புகிறார்.

என்னதான் வடிவேலுக்கு திறமை இருந்தாலும் அவருக்குள் இருக்கும் அகம்பாவத்தால் தான், அவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அது மட்டுமல்ல வடிவேலு தன்னுடன் இருக்கும் சக காமெடி நடிகர்களை வளர விடாமல் அவர்களது வாய்ப்பை தட்டிப் பறித்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். அதிலும் இப்போது திரை விமர்சகர் அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியில்., வடிவேலு ரஜினியை காக்க வைத்து வேடிக்கை பார்த்தார் என சொன்னது பலரையும் காண்டேற்று இருக்கிறது.

ரஜினி- வடிவேலு காம்போவில் வெளியான அதிரடி திரில்லர் திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கும். இதில் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த லூட்டி பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

ஆனால் சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன் பட குழுவினர் ரஜினியை சந்தித்தபோது அவர் ‘முதலில் வடிவேலுவின் கால் ஷீட்டை வாங்கிவிட்டு வாருங்கள், அதன் பிறகு என்னிடம் வரலாம்’ என்று திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் அந்த சமயம் வடிவேலு ரொம்பவே பிஸியாக நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதை ரஜினியிடமும் படக்குழுவினர் தெரியப்படுத்தினர்.

அப்படியும் ரஜினி, ‘நீங்கள் வடிவேலுவை படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டும் வரும் வரை நான் வேறு எந்த படங்களுக்கும் செல்ல மாட்டேன். அவருக்காக காத்திருப்பேன்’ என்று வைகைப்புயல் செட்டுக்கு வரும் வரை அவருக்காக காத்திருந்தார். இருப்பினும் இதைப்பற்றி ஒரு நாள் கூட ரஜினி பெரிதுபடுத்தி பேசவில்லை.

ஆனால் வடிவேலு அவருடைய மருமகன் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ‘ உன்னுடைய மாமனார் ரஜினிக்கே நான் தான் நடிப்பு கற்றுக் கொடுத்தவன்’ என்று புகழ்போதையில் ஓவர் தெனாவட்டுடன் பேசியதால், அந்தப் படத்தில் இருந்து அவர் தூக்கப்பட்டார். அதன் பிறகு தான் வடிவேலுக்கு பதில் விவேக் அந்த படத்தில் கமிட்டாகி நடித்தார். இந்த விஷயத்தை தற்போது அந்தணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து, இனியாவது வாயை அடக்கி கொண்டு இருந்தால் மட்டுமே திரை உலகில் வடிவேலுவால் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.