சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கு எட்டா கனியாய் மாறிய கூட்டணி.. கை கொடுத்த வடிவேலு

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பெயருக்கு தகுந்தார் போல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்திய நிறுவனம்.1990 இல் புதுவசந்தம் படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக கால் பதித்தனர். அன்றிலிருந்து அவர்களுக்கு ஏறுமுகம் தான்.

நடிகர் விஜய்க்கு மிகவும் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் சூப்பர் ஹிட் பிலிம்ஸ். விஜய்யை வைத்து பல வெற்றி படங்கள் கொடுத்து இருக்கிறார்கள். லவ் டுடே , நீ வருவாய் என, திருப்பாச்சி, ஜில்லா என விஜய்க்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

தற்போது அந்த நிறுவனம் தனது நூறாவது படத்தை தயாரிக்க உள்ளது. எப்படியும் விஜய்யை வைத்து இதை நிறைவேற்றி விடலாம் என கனவுகோட்டை கட்டினார்கள். ஆனால் விஜய் ஜில்லா படத்திற்குப் பின் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை.

இப்பொழுது அவர்கள் தங்களது நூறாவது படமான மாரிசன் படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கிறார்கள்.மாமன்னன் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

வடிவேலு தனது ரீ எண்ட் றியில் அரண்மனை4 மாரிசன்,கேங்கர்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அரண்மனை 4 பல வருடங்களுக்குப் பிறகு சுந்தர்சியுடன் இணைகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஈசிஆர் இல் நடைபெற்று வருகிறது.

மாரிசன் படப்பிடிப்பு பகத் பாஸில் பிசியான ஷெட்யூல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாகி வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது முழு நீள காமெடி சார்ந்த கதை என கூறி வருகிறார்கள்..

Leave a Comment