தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகள் கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் தான் முதலிடத்தில் வரும். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலமாகவும், ஸ்டைலின் மூலமாகவும்,தனது எளிமையின் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். 167 படங்களில் 155 படங்களில் ஹீரோவாகவே நடித்து சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருபவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனையோ தோல்வி படங்கள் கொடுத்திருந்தாலும் இவருக்காக ரசிகர்கள் திரையரங்கில் வரிசையில் சண்டை போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி படத்தை புகழ்ந்து தள்ளுவார்கள். ரஜினிகாந்தே துவண்டு போன போதிலும், இவரது ரசிகர்கள் ஒருபோதும் இவரை ஒதுக்கவில்லை.படம் 100 கோடி தாண்டினாலும் சரி,படம் விமர்சனத்துக்கு உள்ளானாலும் சரி திரையரங்கில் ஒருபோதும் கூட்டம் குறைந்தது கிடையாது.
இதன் காரணமாக சூப்பர் ஸ்டாரின் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கால்ஷீட் வாங்குவார்கள்.வருடத்தில் ஒரு படம் நடித்து ரிலீசானாலும் அந்த வருடம் முழுக்க அவரது புகழ் ஓங்கி நிற்கும்.500 கோடிக்கு மேல் அசையா சொத்துக்கள், 85 கோடி வரை சம்பளம்,உலகம் முழுக்க இவரை வைத்து செய்யப்படும் மார்க்கெட் என இவ்வளவு புகழும் எப்படி வருகிறது என்பது தான் பலரது கேள்வி எனலாம்.
இவ்வளவு பேர்,புகழ்,பணம் என அனைத்தையும் சம்பாதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி இவ்வளவு புகழோடு பிரபலமாக உள்ளார் என்ற ரகசியம் தற்போது அம்பலமாகியுள்ளது. ரஜினிகாந்த் பொதுவாகவே ஸ்ரீ ராகவேந்திரா கடவுளை வணங்குபவர்.இதன் காரணமாகவே அடிக்கடி இமயமலைக்கு சென்று வருவார்.
இவரது நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தின் போஸ்டரில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கையில் இருந்த பாபா முத்திரையை மட்டும் தான் கவனித்து இருப்போம்.ஆனால் மற்றொரு கையில் இருந்த சின் முத்திரையை கவனிக்க மறந்திருப்போம். ஆன்மீகத்தின் மீது அதிக பற்றுள்ளதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் தனது கட்டை விரலுடன் மோதிர விரலை இணைத்துக்கொண்டு இருப்பார்.
இதற்கு பெயர் தான் சின் முத்திரை,யோகா வல்லுநர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்த முத்திரையை யார் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா அவர்களுக்கு பேர்,புகழ்,அமைதி,பணம்,எதிரில் உள்ளவர்கள் மதித்து பேசும் வசீகரம் என அனைத்தையும் கொடுக்குமாம். இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கு போனாலும் இந்த முத்திரையை செய்துகொண்டே இருப்பதால் அவர் இன்றும்,என்றும் சூப்பர்ஸ்டாராகவே வலம் வருகிறார்.