தேசிய விருது மெடலை கழுத்தில் அணிந்து போஸ்.. சூர்யா ஜோதிகாவின் மகன், மகளின் புகைப்படம் வைரல்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனிடையே, 68வது தேசிய விருது வெற்றியாளர்களை இந்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதில் சூரரை போற்று திரைப்படத்திற்கு மட்டும் ,சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த நடிகர் என கிட்டத்தட்ட ஐந்து விருதுகளை அள்ளிக் குவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில், பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மூவின் கைகளால் வெற்றியாளர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனிடையே நடிகர் சூர்யா பட்டு வேஷ்டி,சட்டை அணிந்து மேடையில் கெத்தாக சிறந்த நடிகருக்கான விருதினை வாங்கினார்.

அப்போது அரங்கில் அமர்ந்து இருந்த நடிகை ஜோதிகா, சூர்யா விருது வாங்கும் போது அவரது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அதேபோல நடிகை ஜோதிகாவும் அம்சமாக புடவை அணிந்து வந்து சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வாங்கியபோது சூர்யா அவரது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.

தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே தேசிய விருதை வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்ற சூர்யா மற்றும் ஜோதிகா, மகனிடமும் மகளிடமும் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அம்மா, அப்பா வாங்கிய தேசிய விருது மெடலை கழுத்தில் அணிந்து தேவும்,தியாவும் போட்டோவில் போஸ் கொடுத்துள்ளனர்.

surya son
surya son

தற்போது இணையத்தில் இப்புகைப்படமும் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இப்புகைப்படத்தை பகிர்ந்த பலரும் சூர்யாவின் மகள் தியா நன்றாக வளர்ந்து விட்டார் என்றும் மகன் தேவும் சூர்யாவைப் போலவே உள்ளார் என்றும் இணையத்தில் பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு, அதிகமான ரசிகர்கள் தென்னிந்தியாவில் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தங்களது முதல் தேசிய விருதை வாங்கியதை கண்ட அவரது ரசிகர்கள் கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.