தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பை தாண்டி பல சமூக நலத் திட்டங்களையும் செய்து வருபவர். பலதரப்பட்ட கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார் .
ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிப்பில் ஒரு தனித்துவம் தெரியும். படத்தில் உழைப்பும் ரசிகர்கள் நன்றாக தெரியும். அந்தவகையில் தற்போது சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இத்தனை படத்திற்காக சூர்யா பல்வேறு பயிற்சிகளை எடுப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தற்போது இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதைத்தொடர்ந்து வாடி வாசல் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்காக சூர்யா ஒரு காளை உடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவிற்கும் காளைக்கும் உள்ள நெருக்கத்தை தத்ரூபமாக காட்டுவதற்காக சூர்யா காளை உடன் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம். சூர்யா கமலஹாசனை பின்பற்றுபவர். அவர் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தத்ரூபமாக நடிப்பவர்.

அதனால் காளை உடன் பயிற்சியில் உள்ளார் மேலும் இத்திரைப்படத்தில் மற்ற நடிகர் நடிகைகளை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை இருப்பினும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கும் படமாக இருக்கும் என்று தோன்றுகிறது.