மீண்டும் சர்ச்சையில் சூர்யா, ஜோதிகா.. எது செஞ்சாலும் குத்தமா.?

Suriya : சூர்யா குடும்பம் எது செய்தாலும் சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. அவ்வாறு கங்குவா படம் பயங்கரமாக பிரமோஷன் செய்து வெளியான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கோபமடைந்து ஜோதிகா பேசியது சர்ச்சையானது.

இதையடுத்து ஊடகங்களில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பாடல், ரொமான்ஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஜோதிகா கூறியிருந்தார். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகி இருந்தது.

இதுவும் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் சூர்யாவுக்கு மீண்டும் பெரிய அடி விழுந்தது. இந்த சூழலில் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோர் நடிப்பில் வெளியான துடரும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சூர்யா, ஜோதிகா

இதனால் துடரும் படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தியை குடும்பத்துடன் அழைத்து சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் பாராட்டி இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் சினிமாவில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இதற்கு ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற பல சினிமா பிரபலங்கள் படக்குழுவை அழைத்து பாராட்டி வருகின்றனர். ஆனால் சூர்யா குடும்பத்தினர் தமிழ் சினிமாவை கொண்டாடாமல் மலையாளத்தில் வெளியான படத்திற்கு பாராட்டி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ஒருவேளை சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு போட்டியாக டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகி வெற்றி பெற்றதால் பாராட்டவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நல்லதே செய்தாலும் குத்தமா என்ற நிலைமையில் சூர்யாவுக்கு அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.