வாலு போய் கத்தி வந்த கதையா முழிக்கும் சூர்யா.. ஞானவேல் ராஜா படும் பாடு

சூர்யா சமீப காலமாக மலையாளம் மற்றும் தெலுங்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். தமிழில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கை கொடுக்காததால் இந்த அதிரடி முடிவை எடுத்து வருகிறார். ஆனால் இப்பொழுது ஷோகேஸ் கனகராஜ் உடன் ரோலக்ஸ் படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் கைதி இரண்டாம் பாகத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை எடுக்க உள்ளார். இதை விஜய்யின் ஜனநாயகன்படத்தை தயாரிக்கும் கே வி என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவர்கள் தமிழில் அடுத்தடுத்த படங்களை குறி வைத்து வருகிறார்கள்.

தற்சமயம் சூர்யா மனதில் ஒரு தெலுங்கு மற்றுமொரு மலையாள டைரக்டரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடிய விரைவில் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழில் அவருக்கு பெரிய அடியாக அமைந்த படம் கங்குவா. அந்த பட நஷ்டத்தையும் ஈடுகெட்ட முடிவு செய்துள்ளார்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கங்குவா தோல்வியை சரி செய்ய இரண்டு படங்களுக்கு கால் சீட் கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே 2016ஆம் ஆண்டு வெளிவந்த சூர்யாவின் “24” படத்தை தயாரித்ததும் ஞானவேல் ராஜா தான். அந்த தோல்வியை ஈடுகட்ட தான் கங்குவா படத்திற்கு கால் சீட் கொடுத்தார்.

இப்பொழுது கங்குவா பட தோல்வியையும் சரி செய்து வருகிறார். அடுத்து தயாரிக்க இருக்கும் இரண்டு படங்களில் ஒன்றை 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எடுக்க உள்ளனர். வாலு போய் கத்தி வந்தத கதையாய் இருக்கிறது சூர்யாவின் நிலைமை. அதாவது நல்லது செய்ய போய் வேறு பிரச்சனையில் மாட்டிக் கொள்வது.

Leave a Comment