நன்கொடை இல்ல சொந்த வருமானம்.. அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யாவின் எமோஷனல் பேச்சு

Suriya: சூர்யா நடிப்பை தாண்டி பல பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் அதைவிட மாணவர்களுக்காக அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அவருக்கான மதிப்பையும் மரியாதையும் கொடுத்திருக்கிறது.

கடந்த 2006 ஆரம்பிக்கப்பட்ட இந்த பவுண்டேஷன் இப்போது ஆலமரமாக வளர்ந்துள்ளது. இதுவரை 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் படித்து நல்ல நிலையில் உள்ளனர்.

தற்போது டி நகரில் இதன் புது அலுவலகத்தை திறந்து வைத்த சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார். இந்த விழாவில் கார்த்தி, சிவகுமார், ஜோதிகா மற்றும் குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் விழாவிற்கு வருகை தந்துள்ளார். அப்போது பேசிய சூர்யா வருடத்திற்கு 700 மாணவர்களை படிக்க வைத்து வருகிறோம்.

சூர்யாவின் எமோஷனல் பேச்சு

இப்போதும் கூட பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அனைவருக்கும் கல்வி என்பது தான் நம் நோக்கம்.

இப்போதும் கூட பல குடும்பங்களில் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கின்றனர் என கூறினார். மேலும் இது நன்கொடையின் மூலம் கட்டப்பட்ட கட்டிடம் கிடையாது.

எனக்கு வரும் வருமானத்தின் மூலம் கட்டப்பட்டது. சொந்த வீடு கட்டுவதை விட அதிக சந்தோசத்தை இது கொடுத்திருக்கிறது என சூர்யா பேசியுள்ளார்.

Leave a Comment