ஜோதிகாவால் சூர்யாக்கு கிடைத்த சர்க்கிள்.. இளம் இயக்குனர்கள் கைகளில் ரெட்ரோவின் எதிர்காலம்

விக்ரம் வரிசையில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க நடிகராக சூர்யா பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு படங்களிலும் தனக்கு உண்டான வேலையை நன்றாக செய்து விடுவார் ஆனால் கதை தேர்வில் கோட்டை விடுவதால் படம் இவருக்கு கை கொடுப்பதில்லை. அப்படி சமீபத்தில் அவர் சந்தித்த தோல்விகள் பல.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஹிட் அடிக்க வில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், கங்குவா போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா படம் இவருக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது.

இனிமேல் கதை தேர்வில் கோட்டை விடக்கூடாது என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டார். இதனால் இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி போடுகிறார். குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் அன்று ரிலீஸ் ஆகிறது.

ரெட்ரோ படத்தை முடித்த கையோடு ஆர்ஜே பாலாஜி மற்றும் வாடிவாசல் படங்களை முடிக்கிறார். அதன்பின் மலையாளத்தில் பேசில் ஜோசப் உடன் சூர்யா 47 படம் பண்ண இருக்கிறார். அதற்காக அவரிடம் கதை கேட்டும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள இயக்குனர்களுடனும் கூட்டணி போடுகிறார்.

சமீபத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா மம்மூட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்தார். அங்கே சூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சூர்யாவிற்கு நிறைய பழக்கவழக்கங்கள் கிடைத்தது. அதன் மூலம் இப்பொழுது நல்ல நல்ல கதை மற்றும் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

Leave a Comment