Suriya: கடந்த சில வருடங்களாக சூர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. பிரம்மாண்டமாக வெளியான கங்குவா சமீபத்தில் வந்த ரெட்ரோ ஆகிய படங்கள் காலை வாரி விட்டது.
இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் சூர்யா கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அதில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்துள்ள சூர்யா 45 தீபாவளியை குறி வைத்துள்ளது.
அதை அடுத்து வாடிவாசல் படம் தொடங்கப் போகிறது. அதேபோல் சூர்யா தெலுங்கு இயக்குனருடன் இணைய போகும் அறிவிப்பை சமீபத்தில் அறிவித்திருந்தார்.
லக்கி பாஸ்கரால் சூர்யாவுக்கு அடித்த லக்
அதன்படி வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 சித்தாரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. நேரடி தெலுங்கு தமிழ் மொழியில் இப்படம் எடுக்கப்பட உள்ளது.
இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே அதிர்ஷ்டம் கொட்டி இருக்கிறது. அதாவது இப்படத்தின் டிஜிட்டல் உரிமை பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.
அதன்படி இந்த உரிமையை 85 கோடிகள் கொடுத்து வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ். இதற்கு காரணம் வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் நெட்பிளிக்ஸ்க்கு பெரும் லாபத்தை கொடுத்தது.
அந்த அடிப்படையில் தான் சூர்யா 46 படத்தையும் வாங்கி இருக்கின்றனர். முன்னதாக ரெட்ரோ டிஜிட்டல் உரிமை 65 கோடிகள் தான் விற்பனையானது.
சூர்யா 45 பட டிஜிட்டல் உரிமை இன்னும் வியாபாரமாகவில்லை. இந்த சூழலில் 46வது படம் சூர்யாவுக்கு அதிர்ஷ்டமாக இருக்கிறது. அதே போல் இப்படத்திற்காக அவர் 60 கோடி சம்பளம் வாங்குவதும் குறிப்பிடத்தக்கது.