4 திருப்புமுனை இயக்குனர்களை கழட்டிவிட்ட சூர்யா.. வணங்கானைத் தொடர்ந்து வாடிவாசலுக்கு கொடுத்த டிமிக்கி

கோலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவரை புகழுக்கு உச்சத்துக்கு கொண்டு சென்றது சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான்.

ஏனென்றால் இந்த படத்தில் இவருடைய கொடூரமான வில்லத்தனத்தை ரசிகர்கள் பார்த்த பிறகு நடிப்பு அரக்கனாகவே தெரிகிறார். இதனால் பல படங்களை கமிட்டாகி கொண்டிருக்கும் சூர்யாவிற்கு இப்போது கொஞ்சம் கூட அனுசரிக்கும் மனநிலை இல்லாமல் போய்விட்டது. அதிலும் 4 திருப்புமுனை இயக்குனர்களுக்கு சூர்யா டிமிக்கி கொடுத்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன்: காக்க காக்க, வாரணம் ஆயிரம் என சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அவருடைய சினிமா கேரியருக்கு சிறப்பு முனையை கொடுத்த கௌதம் வாசு வாசு மேனன், அடுத்ததாக சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் படத்தில் இணை இருந்தானர். ஆனால் சில கருத்து வேறுபாடால் சூர்யா-வால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

ஹரி: ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் என பல வெற்றிகளை கொடுத்த சூர்யாவின் அஸ்தான இயக்குனராக இருந்தவர் ஹரி. இவர்களது கூட்டணியில் அருவா என்கின்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் பல காரணங்களினால் அந்த படம் டிராப் ஆனது.

பாலா: பிதாமகன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் சூர்யா-பாலா காம்போவில் வணங்கான் என்ற படம் உருவாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் சில கதைகளை மாற்றியமைத்ததால் அது சூர்யாவிற்கு செட் ஆகாது என அதன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர்.

வெற்றிமாறன்: தற்போது சூர்யா 10 மொழிகளில் தயாராகும் சூர்யாவின் 42வது படமான வீர் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வெற்றிமாறன் நடிப்பில் உருவாக இருந்த வாடிவாசலின் படப்பிடிப்பு இரண்டு வருடம் தள்ளிப் போடப் போவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் வாடிவாசல் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவானதால், இதற்காக காளைகளுடன் பயிற்சியில் ஈடுபட்ட சூர்யா திடீரென்று வாடிவாசல் படத்தையும் ட்ராப் செய்துவிட்டார்.

இவ்வாறு பெரிய பெரிய இயக்குனர்களுடன் கமிட்டாகி அந்த படங்களுக்கான படப்பிடிப்பை திடீரென்று நிறுத்திவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் போது சூர்யாவிற்கு முன்பு இருந்த அனுசரிக்கும் தன்மை இல்லாமல் போனதுதான் காரணம்.