Actor Surya: சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் தற்போது கங்குவா படம் உருவாகி வருகிறது. 3டி அனிமேஷனில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது கங்குவா படத்தில் பிரம்மாண்ட பாடல் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்ததாக கொடைக்கானலில் சூட்டிங் நடத்த உள்ளனர்.
மேலும் கங்குவா படம் வருகின்ற டிசம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தை முடித்த கையுடன் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை படத்தின் வெற்றியால் தற்போது விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் பிசியாக இருக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டாலும் விடுதலை படத்தை எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆகையால் விடுதலை 2 படத்தை மாபெரும் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதால் அதில் நேரத்தை செலவிட்டு வருகிறார். இதனால் இப்போதைக்கு வாடிவாசல் படம் தொடங்குவது கடினம்.
ஆகையால் கங்குவா படத்தை முடித்த பின்பு வெற்றிமாறனுக்காக சில மாதங்கள் சூர்யா காத்திருக்க விரும்பவில்லை. எனவே வாடிவாசல் படத்திற்கு முன்னதாகவே சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைய இருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மீண்டும் இவர்கள் இணைய உள்ள செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறாராம்.
சூரரைப் போற்று படம் ஏர் டெக்கான் கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. எனவே மீண்டும் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைய உள்ள படமும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அல்லது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமாக எடுக்கப்பட உள்ளதாம். எனவே மீண்டும் சூரரை போற்று கூட்டணி இணைந்துள்ளதால் இதுவும் நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.