படம் ஹிட்டானா மொத்த சம்பளத்தையும் திருப்பதி உண்டியலில் போட்டு விடுறேன்.. சொன்னதை செய்த சூர்யா

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. கடந்த சில வருடங்களில் பல தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் அவருக்கான ரசிகர் பட்டாளம் கொஞ்சமும் குறையவில்லை.

மேலும் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்புகளும் குறைந்தபாடில்லை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கிய நடிகராக வலம் வருகிறார்.

ஒரு கட்டத்தில் ரஜினிக்கு பிறகு அதிக மார்க்கெட் மற்றும் வசூல் செய்யும் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூர்யா கடந்த சில வருடங்களில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளார் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இருந்தாலும் சூரரைப்போற்று படம் அதை மீட்டுக் கொடுத்து விட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஆரம்பகட்ட வெற்றி படமாக இருந்தது விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடித்த உன்னை நினைத்து திரைப்படம் தான்.

முதலில் இந்த படத்தில் விஜய் சில நாட்கள் நடித்து விட்டு கதை பிடிக்கவில்லை என விலக்கியதன் மூலம் சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் உன்னை நினைத்து படம் வெற்றியடைந்து விட்டால் அந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளம் மொத்தத்தையும் திருப்பதி உண்டியலில் போட்டு விடுகிறேன் என விக்ரமனிடம் சொன்னாராம் சூர்யா. சொன்னதைப்போலவே படம் வெளியாகி வெற்றி செய்தி கேட்டவுடன் திருப்பதிக்குச் சென்று லட்டுடன் வந்து விக்ரமனை சந்தித்தாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்ரமன் இதை பகிர்ந்து கொண்டுள்ளார்.

suriya-unnai-ninaithu
suriya-unnai-ninaithu