கங்குவாவை அடுத்து 600 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் சூர்யா.. இதாச்சும் 1000 கோடி வசூலிக்குமா?

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். இது எல்லா முன்னணி நடிகர்களுக்குமே நடக்கின்ற விஷயம்தான். ஆனால் சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படத்தை வைச்சு செய்தனர் ரசிகர்கள். சினிமா விமர்சகர்களான ப்ளூசட்டை மாறன், பிஸ்மி, அந்தணன் உள்ளிட்ட பலரும் கடுமையான விமர்சித்திருந்தனர்.

இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதே கங்குவா படக்குழுவினரின் பேச்சுதான். குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சூர்யா ஆகியோர் மேடையில் ஓவர் ஹைப்பை இப்படத்துக்கு ஏற்றிவிட்ட நிலையில் இதை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனார். ஆனாலும், ஒற்றை ஆளாக படத்தை தாங்கி நின்ற சூர்யாவின் நடிப்பு, ஒளிப்பதிவு, சிவாவின் பிரமாண்ட படைப்பு இதெல்லாம் தமிழ் சினிமாவில் புதிய என ஜோதிகா, நடிகர் மாதவன், இயக்குனர் சுசீந்தரன் ஆகியோர் பாராட்டி வருகின்றனர்.

கங்குவாவை அடுத்து, சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். அதேபோல், ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா45 படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சூர்யா நடிப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கர்ணா

ஏற்கனவே, சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் சூரரைப் போற்று படத்தை இந்தியில் Sarfira என்ற பெயரில் தயாரித்ததன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த சூர்யா, ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தை பாலிவுட் இயக்குனர் ஓம்பிரகாஷ் இயக்கவுள்ளார்.

கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கங்குவாவை விட அதிக பொருட்செலவில் அதாவது ரூ.600 கோடி பெட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. கங்குவா பட விமர்சனத்தின் மூலம் பாடம் கற்று, வேறு யாரும் முயற்சிக்காத வகையில், தமிழ் சினிமாவில் இருந்து 2 வது பான் இந்தியா படமாக சூர்யாவின் கர்ணா உருவாகவுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் நிச்சயம் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாகுபலியில் சூர்யா நடிக்க வேண்டியது என ராஜமெளலி கூறியிருந்த நிலையில் அவர் தவறவிட்ட வாய்ப்பை ஓம்பிரகாஷ் பிடித்துக் கொள்வார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment