சூர்யா என்ற பெயர் கோலிவுட் சினிமாவில் சத்தமாக ஒலித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடங்கள் என்றே சொல்லலாம். இந்த காலகட்டங்களில் சூர்யா நடித்த எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.
கடைசியாக வந்த சூரரைப் போற்று திரைப்படம் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. இருந்தாலும் அந்த படம் நேரடியாக அமேசான் என்ற ஓடிடி தளத்தில் வெளியானதால் தியேட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனக் கூறி விட்டார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள்.
இதனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மீண்டும் உள்ளாகியுள்ளார் சூர்யா. இது ஒருபுறமிருக்க சூரரைப் போற்று படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் கடைசியாக ஹிந்தியில் கூட அந்த படம் டப் செய்யப்பட்டு அமேசான் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம் சூர்யா.
இதற்கான பேச்சுவார்த்தைகள் முறிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாக தெரிகிறது. அது சம்பந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் சூர்யா, ஜோதிகா மற்றும் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இதை அறிந்த கோலிவுட் மூத்த தயாரிப்பாளர்கள், ஏற்கனவே இந்தியா முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்ற படத்தை ரீமேக் செய்வது முட்டாள்தனம் எனக்கூறி வருகின்றனர்.