சூர்யா படத்தால் நெஞ்சுவலி வராத குறை தான்.. அத்தனை கோடிகளை இழந்து இடி தாங்கியாய் நிற்கும் தயாரிப்பாளர்

Actor Suriya : சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்கள் என்று எதுவும் அமையவில்லை. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

மற்றொருபுறம் சூர்யாவின் வாடிவாசல் படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படம் தொடங்கப்பட்டது. இந்த சமயத்தில் இந்த படத்தின் பட்ஜெட் 65 கோடி என ஒதுக்கப்பட்டது.

இப்போது வாடிவாசல் தொடங்குவதற்கு முன்பாகவே 30 கோடி கடனில் கலைப்புலி தானு இருக்கிறாராம். அதாவது சூர்யாவுக்கு வாடிவாசல் படத்திற்கான அட்வான்ஸ் தொகை 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு 5 கோடி கொடுத்து உள்ளனர்.

வாடிவாசல் படத்திற்கான முன்னோட்ட காட்சி எடுப்பதற்கே ஒரு கோடி செலவாகியுள்ளது. இது தவிர லண்டனில் சிஜி வேலைகள் நடந்து வந்தது. ஏனென்றால் படத்தில் காளையை தத்ரூபமாக காட்டுவதற்கான வேலையில் படக்குழு இறங்கி இருந்தது. இப்போது ஏகப்பட்ட செலவு ஆகிவிட்டது.

ஆகையால் படத்தை தொடங்குவதற்கு முன்பே இத்தனை கோடி கடனில் கலைபுலி இருந்து வருகிறார். இப்போது சூர்யா கங்குவா படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பில் உள்ளார். எனவே எப்போது வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரியாமல் கலைப்புலி தாணு விழி பிதுங்கி நிற்கிறார்.