500 கோடி பட்ஜெட்டில் சூர்யா நடிக்கவிருக்கும் படம்..

சமீபகாலமாக பல பிரபலங்கள் இணைந்து ஒரே படத்தில் நடித்து ஹிட் கொடுக்கும் யுக்தியை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி கோலிவுட்டில் வெளியான மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து பான் இந்தியா படத்தில் சூர்யா நடிக்கப்போகிறார். ஆனால் அவர் அந்தப் படத்தின் ஹீரோவாக அல்ல.

இருப்பினும் வலுவாக பேசப்படும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ப்ராஜெக்ட் கே (Project K) என்ற 500 கோடி பட்ஜெட் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் அறிவியல் சம்பந்தப்பட்ட படமாக 2050 ஆம் ஆண்டில் நடப்பது போன்று வடிவமைத்து வைத்துள்ளாராம்.

அந்த காலத்தில் இந்த உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை எல்லாம் சிந்தித்து, கிராபிக்ஸ் காட்சிகளை இந்தப் படத்தில் தெறிக்க விடப் போகின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த படம் பான்இந்தியா படமாக எடுப்பதால் எல்லா மொழிகளிலும் இருக்கும் முன்னணி நடிகர்களை வைத்து இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஹிந்தியில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் இருவரும், தெலுங்கிலிருந்து மகேஷ்பாபு, தமிழில் இருந்து சூர்யாவையும் தேர்ந்தெடுத்து இந்த படத்தில் இணைத்துள்ளனர்.

கோலிவுட்டிலிருந்து சூர்யாவை தேர்வு செய்வதற்கு என்ன காரணம் என்றால் அவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் அவரது நடிப்பு படத்தை பார்த்த பிறகு வெளியே வந்த ரசிகர்களின் கண்முன் அப்படியே நின்றது.

ஆகையால் அது போன்ற கதாபாத்திரம் தான் ப்ராஜெக்ட் கே படத்தில் சூர்யாவிற்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு 500 பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்படும் இந்த படத்தில் இன்னும் சில பிரபலமான நடிகைகளும் நடிக்க உள்ளனர்.