பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

Actor Suriya: சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இதுதவிர இயக்குனர் சுதா கொங்கரா உடன் ஒரு படத்தில் சூர்யா இணைய இருக்கிறார். இவ்வாறு நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்த படங்களில் சூர்யா கமிட்டாகி வரும் நிலையில் இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கிறார். அதாவது சூர்யா பாலிவுட் பக்கம் செல்ல போகிறார் என்ற ஒரு தகவல் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது ஒரு விஷயம் அரங்கேறி இருக்கிறது. அதாவது பாலிவுட் நடிகரான ராகேஷ் ஓம்பிரகாஷை சமீபத்தில் மும்பையில் சூர்யா சந்தித்து இருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரம் ஆன கர்ணனின் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் பண்ண உள்ளார்கள்.

இதில் கர்ணனாக சூர்யா நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டம் வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் ஜோதிகா பாலிவுட்டில் களம் இறங்கி இருக்கிறார்.

சூர்யாவும் பாலிவுட் சினிமாவுக்கு சென்று உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யாவின் படங்களை எடுத்துக் கொண்டால் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். கோபிநாத்தின் பயோபிக் படமான சூரரைப் போற்று படத்தில் நடித்துவிட்டு அப்படியே நேர் எதிரான ஜெய்பீம் படத்தில் அசத்தி இருந்தார்.

இப்போது கங்குவா படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் காளையை அடக்கும் வீரனாக நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து மகாபாரத கதையை தூக்கி நிறுத்தும் கர்ணன் கதாபாத்திரம் சூர்யாவுக்கு கனகச்சிதமாக பொருந்தும். மேலும் இந்த படம் குறித்து அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.