தொடர் தோல்விகளால் யோசிக்க ஆரம்பித்த சூர்யா.. வலது கரத்திற்கு வைத்த செக்

Suriya: சூர்யா படங்களை தியேட்டரில் பெரிய அளவில் கொண்டாடி பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக சிங்கம் படம் தான் அவருக்கு பெருமளவில் வெற்றியை தேடி தந்தது.

அதன் பிறகு ஜெய் பீம், சூரரைப் போற்று படங்கள் டிஜிட்டலில் தான் வெளியானது. ஆனால் தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ வரை பல்பு வாங்கியது தான் மிச்சம்.

அதை அடுத்து ரசிகர்கள் கூட சூர்யா கவனமாக கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆலோசனை கூறி வருகின்றனர். அதையே தான் அவரும் இப்போது சிந்தித்து வருகிறாராம்.

வலது கரத்திற்கு வைத்த செக்

அவருடைய தம்பி கார்த்தி கூட நல்ல கதை அம்ச படங்களை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். ஆனால் சூர்யா நாம் எங்கு கோட்டை விட்டோம் என்பதை இப்போதுதான் யோசிக்க தொடங்கி இருக்கிறார்.

அதையடுத்து தற்போது அவர் தனது வலது கரமாக செயல்பட்டவருக்கு செக் வைத்திருக்கிறார். அதன்படி சூர்யாவின் நிழல் என்று சொல்லும் அளவுக்கு கூடவே இருந்தவர்தான் ராஜசேகர் பாண்டியன்.

2D நிறுவனத்தின் முக்கிய புள்ளி இவர்தான். இவரை தாண்டி தான் சூர்யாவை சந்திக்க முடியும் என்ற அளவுக்கு தான் நிலைமை இருந்தது.

இது பலருக்கு அதிருப்தியாக கூட இருந்தது. அதன்படி தற்போது சூர்யா ராஜசேகரிடம் இருந்த பொறுப்புகளை வேறு ஒருவருக்கு பிரித்து கொடுத்து விட்டாராம்.

இதன் பிறகு புது மாற்றம் இருக்கும் என்கின்றனர். எப்படியோ சூர்யா இனிமேலாவது கதை விஷயத்தில் உஷாராக இருந்தால் சரிதான்.