கங்குவா-விற்கு முன் சூப்பர் ஹிட் படத்தை வைத்து வசூலை அள்ளும் சூர்யா.. 500 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்

Actor Surya Movie Re Release: தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள், அவர்கள் நடித்த
ஏதாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை எடுத்து அதை ரீ ரிலீஸ் செய்து மக்களை குதுகல படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் மறுபடியும் அவர்கள் வசூல் அளவில் பெரிய லாபத்தை சம்பாதித்து விடலாம். மேலும் அந்த நடிகர்களின் அடுத்த படத்திற்கான ஒரு சின்ன ப்ரோமோஷன் காகவும் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரஜினிக்கு பாபா, கமலுக்கு வேட்டையாடு விளையாடு போன்ற படங்களை ரீ ரிலீஸ் செய்து நல்ல வசூலை பெற்று லாபத்தை பார்த்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் படத்தை இன்று ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அதாவது சூர்யா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் சூர்யா, அப்பா மகன் என்று இரண்டு வேடங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்திருப்பார். இந்த சூப்பர் ஹிட் படத்தை இன்று தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியாகி வருகிறது.

இப்படம் 500க்கும் மேலான திரையரங்குகளில் வெளியாகி உள்ளதால் முக்கால்வாசி தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் திரையரங்குக்குள் அவர்களுடைய ஆரவாரமான சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள்.

இதன் மூலம் சூர்யாவின் நடிப்பு அக்கட தேசம் முழுவதும் இன்று கொடி கட்டி பறந்து வருகிறது. கண்டிப்பாக வாரணம் ஆயிரம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமையும். மேலூர் தற்போது சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் 10 மொழிகளில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் வாரணம் ஆயிரம் படத்தை இன்று பார்த்து வரும் அனைத்து ரசிகர்களும் சூர்யாவின் அடுத்த படமான கங்குவா படத்தை ஆர்வமாக பார்ப்பதற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் கங்குவா படத்திற்குப் முன், அதிக வசூலை வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பார்த்து வருகிறார்கள்.