வருடத்திற்கு 10 படங்கள் என்று பண்ணாமல் ஒரு படத்தை எடுத்து 10 வருடம் பேச வைப்பவர் தான் இயக்குனர் பாலா. அவருடைய படம் எவ்வளவு நாள் தாமதமாக வருகிறதோ அந்த அளவிற்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பாலாவின் படத்தில் நடிக்கக் கூடிய நடிகர்கள் எப்படி நடித்து இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும், அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுக்கு உள்ளாகி விடுவார்கள். அப்படி பார்க்கும்போது இயக்குனர் பாலா அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் வந்தது.
அந்த நேரத்தில் நடிகர் சூர்யா அவர்கள் இயக்குனர் பாலாவுடன் இணைய இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. அதன்படி இந்த படத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க பாலா இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்றும் சூர்யாவும் பாலாவும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும் இருக்கும் என்றும் இணையத்தில் பல செய்திகள் வெளியானது. இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் பிதாமகன் மற்றும் நந்தா படத்தில் இணைந்து பணியாற்றினர். அந்த இரு படங்களும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த சமயத்தில் இந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் வேலையில் இறங்கியிருக்கிறார் பாலா. பாலாவை பொருத்தமட்டில் ஹீரோயின் அழகாக இருக்கவேண்டும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் காட்சிக்கு காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் கிடையாது. அவர் கதைக்கு ஏற்றவாறு ஹீரோயினை தேர்வு செய்து கொள்வார்.
இதற்கு முன்னால் இவரின் படத்தில் நடித்த, பல ஹீரோயின்களின் மார்க்கெட்டுகள் அந்த படத்திற்கு பிறகு வீணாகிப் போய்விடும். எடுத்துக்காட்டிற்கு பாலாவின் ஹீரோயின்களான பூஜா, வேதிகா போன்றவர்கள் படத்தில் நடிக்கும்போது நடிப்பில் எவ்வளவுதான் சிறப்பாக நடித்து, பல தரப்பிலிருந்தும் பாராட்டு பெற்றாலும் அதன் பிறகு அவர்களின் மார்க்கெட் அப்படியே சரிந்து விடும். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்
அதுமட்டுமின்றி, பாலாவின் படம் என்றால் கண்டிப்பாக வருடக்கணக்கில் படம் இழுத்துக்கொண்டு செல்லும். அவ்வளவு நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் நடிக்க முடியாது என்பதால் யாரும் பாலாவின் படத்திற்கு ஒப்புக்கொள்வதில்லை. பாலாவின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி விட்டால் கண்டிப்பாக மிகப் பெரிய வாய்ப்புகள் நம்மை வந்து சேரும் என்று பல ஹீரோயின்கள் பாலாவின் படத்திற்காக உடல் எடையை குறைத்து, நிறத்தை கருக்கச் செய்து, கண் விழிகளை படத்தின் கதைக்கேற்ப மாற்றி பூஜா போன்ற நடிகைகள் அர்ப்பணிப்போடு பல படங்களை நடித்து இருக்கின்றனர். இருந்தாலும் அதன் பிறகு அவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் கூட இல்லாமல் போய் விட்டு விடுகிறது.
இதனால் இந்த படத்திற்கான ஹீரோயினை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பாலா. அவர் எதிர்பார்க்கும் ஹீரோயின் கிடைக்காமல், தற்போது எரிச்சலில் இருக்கிறாராம் இயக்குனர் பாலா. சூர்யாவிற்கு ஏற்றார் போல் ஒரு ஹீரோயின் கிடைக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் தேடிக்கொண்டிருக்கிறார் . பாலாவின் படத்திற்கு ஹீரோ கூட ஈசியாக கிடைத்துவிடுகின்றனர். ஆனால் ஹீரோயின் கிடைப்பது தான் இன்றைய தேதிக்கு மிக மிக கடினமாக இருக்கிறது.