ஒரு காலத்தில் ஒரு மொழியில் வெற்றிபெறும் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. ஆனால் சமீபகாலமாக குறைந்த அளவு படங்களே அந்த மாதிரி ரீமேக் செய்கின்றனர்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் நடிகர்கள் ரீமேக் செய்வதைவிட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருவேளை அப்படி படம் ஹிட்டாகிவிட்டால் மற்ற மொழிகளிலும் அவர்களது மார்க்கெட் உயரும்.
அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரிய அளவு மார்க்கெட் வைத்திருப்பவர்தான் சூர்யா. எப்போதுமே சூர்யாவின் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும்.
ஆனால் தற்போது சூர்யா, நானி மற்றும் விக்ரம் குமார் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கேங்லீடர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் படம்தான் விஜய் டிவியில் ஏற்கனவே டப்பிங் செய்து ஒளிபரப்பி விட்டனர். அதுபோக விக்ரம்குமார் ஏற்கனவே சூர்யாவை வைத்து 24 என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட விரைவில் உருவாகப் போவதாக கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில் இந்த வதந்தியை கிளப்பி விட்டார்கள் என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம் சூர்யா வட்டாரம். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா, வெற்றிமாறனின் வாடிவாசல் போன்ற படங்கள் வெயிட்டிங்கில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.