100 கோடியை தொட்டதா ரெட்ரோ.. மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட்

Suriya : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் மே ஒன்றாம் தேதி தியேட்டரில் வெளியானது ரெட்ரோ படம். இந்த படத்துடன் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியானதால் ரெட்ரோ படத்தின் கலெக்ஷன் பாதிப்பு ஏற்பட்டது. விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் பெரிய வசூல் பெற முடியவில்லை.

இந்த சூழலில் ரெட்ரோ படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் கலெக்ஷன் ரிப்போட்டை இந்த பதிவில் பார்க்கலாம். ரெட்ரோ படத்தை கிட்டத்தட்ட 65 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். இதுதவிர ஓடிடி உரிமையும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை சாட்டிலைட் உரிமம் மட்டும் விற்கப்படாமல் இருக்கிறது. மேலும் ரெட்ரோ படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் 97.55 கோடி கலெக்ஷன் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 48.90 கோடி வசூல் பெற்றுள்ளது.

ரெட்ரோ படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்

இதை அடுத்து ஆந்திராவில் 7.70 மற்றும் கர்நாடகாவில் 7.65 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. மேலும் கேரளாவில் 4.75 கோடி மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா 1.90 கோடி வசூலை அடைந்தது. ஓவர் சீசில் கிட்டத்தட்ட 26.65 கோடி கலெக்ஷன் செய்துள்ளது.

ஆகையால் நூறு கோடி வசூலை நூல் இலையில் ரெட்ரோ படம் தவறவிட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும் சொல்லலாம். ஏனென்றால் அந்த படத்தின் அமோக வரவேற்பால் ரெட்ரோ படத்தின் கூட்டம் குறைந்தது.

கங்குவா படம் தோல்வியில் இருந்து மீண்டு வந்த சூர்யாவுக்கு இந்த படம் சற்று ஆறுதலை கொடுத்திருக்கிறது. ஆனால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாதது சூர்யாவுக்கு வருத்தம் தான். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா முழு நம்பிக்கை வைத்துள்ளார்.