Retro First Day Collection : கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் நேற்று வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யாவில் முந்தைய படமான கங்குவா படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
படத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கிடைத்தது. இதற்கு காரணம் கங்குவா படத்தின் ஹைப்பை ஏற்றியதுதான். மேலும் இணையத்தில் அந்த படம் ட்ரோலுக்கு உள்ளானது.
இப்போது சூர்யா எப்படியும் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் தான் மெட்ரோ படத்தை இறக்கினார். அதுவும் கார்த்திக் சுப்புராஜ் பெரிய நடிகர்களுக்கு தரமான மாஸ் படங்களை கொடுத்திருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ முதல் நாள் வசூல்
அந்த வித்தை சூர்யாவுக்கும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தைப் பற்றி சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கதை மெதுவாக சென்றதாக விமர்சனங்கள் வருகிறது.
மேலும் முதல் நாள் வசூலும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 12 கோடி வசூலை ரெட்ரோ பெற்று இருக்கிறது. உலகம் முழுவதும் 18 கோடி வசூல் அடைந்துள்ளது.
ரெட்ரோ படத்தின் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டான நிலையில் படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலாவது ரெட்ரோ படம் கல்லாக கட்டுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.