தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான டைட்டில் லுக் போஸ்டர் கூட இன்று மாலை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த நவரசா வெப் சீரிஸ் ஒன்றில் கௌதம் மேனன் இயக்கத்தில் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதற்கான பாடல்கள் கூட வெளியாகி வைரலாகி வருகின்றன.
துருவ நட்சத்திரம் படத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த சூர்யா மற்றும் கவுதம் மேனன் மீண்டும் மணிரத்னம் மூலம் இணைந்துள்ளனர். இந்நிலையில் இந்த குறும்படம் இயக்கும் போதே அடுத்ததாக சூர்யாவிடம் ஒரு கதை சொல்லி அசத்தி விட்டாராம் கௌதம் மேனன்.
எப்போது வேண்டுமானாலும் இந்த கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். மேலும் இது பற்றி கௌதம் மேனனிடம் கேட்கையில், இந்த குறும்படம் இயக்கும் கால கட்டத்தில் இருவரும் நிறைய பேசியிருக்கிறோம்.
விரைவில் ஒரு புதுப்படத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தெரிவித்துள்ளார் கௌதம் மேனன். மீண்டும் வாரணம் ஆயிரம் போன்ற ஒரு படத்தை எதிர் பார்க்கலாமாம்.
