இரட்டை வேஷம் போடுகிறாரா ஜோதிகா.? சூர்யாவை காலி பண்ணாம ஓய மாட்டார் போலருக்கே

Jyothika-Suriya: சமீப காலமாக ஜோதிகா எது பேசினாலும் அது சர்ச்சையாக தான் பார்க்கப்படுகிறது. கோவில்களுக்கு கொடுக்கும் காசை ஸ்கூல், ஹாஸ்பிடல் ஆகியவற்றுக்கு கொடுத்து உதவுங்கள் என ஒரு முறை கூறியிருந்தார்.

அங்கு ஆரம்பித்தது பிரச்சினை. அதிலிருந்து அவர் எது பேசினாலும் பஞ்சாயத்தில் தான் முடிகிறது. அதேபோல் பாலிவுட் வாய்ப்புக்காக குடும்பத்தோடு மும்பை பறந்தார். அங்கு போனதும் தமிழ் சினிமாவை முடிந்த அளவுக்கு அவர் மோசமாக விமர்சித்து இருந்தார்.

தமிழ் திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் இல்லை. ஆணாதிக்கம் இருக்கிறது. ஹீரோக்கள் தங்கள் படங்களில் புகைபிடிப்பது குடிப்பது என சர்வ சாதாரணமாக நடிக்கிறார்கள். இப்படியாக பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார்.

இரட்டை வேஷம் போடுகிறாரா ஜோதிகா.?

இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அதேப்போல் ஹீரோயின்களை ஐட்டம் டான்ஸ் ஆட வைக்கிறார்கள் என்று கூட ஒரு கருத்து சொல்லி இருந்தார். இதைத்தான் சூர்யாவும் தன் படத்தில் செய்கிறார். ஆனால் அதுக்கெல்லாம் கருத்து சொல்ல மாட்டீங்களா என ரசிகர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

அதிலும் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் என அடுத்தடுத்து வெளியானது. அதில் சூர்யா வாயில் சுருட்டு வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார்.

அதைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள் இரட்டை வேஷம் போடும் ஜோதிகா. அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. உங்க ஹஸ்பண்ட் படத்துலயும் இதுதான் நடக்குது. இப்ப மட்டும் பேச மாட்டீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதேபோல் தமிழ் சினிமாவை தூக்கி எறிந்து விட்டு மும்பை போனாங்க. அங்க வாய்ப்பு இல்லனதும் மறுபடியும் சென்னைக்கு வந்துட்டாங்க. இவங்க படத்த ஓட விடக்கூடாது என சில ரசிகர்கள் சபதம் எடுத்துள்ளனர்.

ஆக மொத்தம் ஜோதிகா செய்யும் அத்தனையும் சூர்யாவுக்கு தான் ஆப்பாக முடிகிறது. போற போக்கை பார்த்தா இவரை காலி செய்யாம அண்ணி ஓயமாட்டாங்க போல.