தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு லாபம் தருமா ரெட்ரோ.? முதல் நாள் வசூல் கணிப்பு

Retro: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

சம்மர் விடுமுறை, உழைப்பாளர் தின லீவு என முக்கிய நாளை குறிவைத்து படம் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் ப்ரமோஷனும் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது.

அது மட்டும் இன்றி பாடல்களில் தொடங்கி ட்ரைலர் வரை அனைத்துமே ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து விட்டது. இதனால் படம் நிச்சயம் சூர்யாவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் நாள் வசூல் கணிப்பு

அதே சமயம் அவருடைய முந்தைய படமான கங்குவா எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயமும், சூர்யாவுக்கு இருக்கிறது.

மேலும் அதே நாளில் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளியாகிறது. படத்திற்கும் தற்போது பாசிட்டி விமர்சனங்கள் இருக்கிறது. இந்த சூழலில் ரெட்ரோ எவ்வளவு வசூல் வேட்டையாடும் என்ற கணிப்பும் வைரலாகி வருகிறது.

அதன்படி சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அளவில் முதல் நாளில் மட்டுமே 15 கோடியை வசூலிக்கும் என கணிப்புகள் சொல்கின்றன.

அதேபோல் உலகம் முழுவதிலும் 20 முதல் 25 கோடிகளை தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதாலும் விரைவில் போட்ட காசை படம் எடுத்துவிடும் என்கின்றனர்.