கருப்பன் வரான் வழி மறிக்காதே, சம்பவம் செய்யும் சூர்யா.. கருப்பு டீசர் விமர்சனம்

Suriya : ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது கருப்பு படம். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த சூழலில் இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

சூர்யாவின் முந்தைய படமான கங்குவா மற்றும் ரெட்ரோ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. அந்த தோல்வியை மறக்கடிக்கும் வகையில் கருப்பு படம் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்கும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கருப்பு படம் பக்கா மாசாக உருவாகி இருக்கிறது, டீசரிலே தெரிந்துள்ளது. அதாவது கருப்பு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். மற்றொருபுறம் தீவிர கடவுள் நம்பிக்கை உடையவராகவும் வளம் வருகிறார்.

கருப்பு படத்தின் டீசர் விமர்சனம்

பக்கா ஆக்சன் படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சாய் அபயங்கர் பின்னணி இசை செம மாஸ். மேலும் சில இடங்களில் மற்ற படங்களின் சாயல் இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சூர்யாவின் நடிப்பு வேற லெவலில் அமைந்திருக்கிறது.

ஆர்.ஜே பாலாஜி இதற்கு முன் தன்னுடைய இயக்கத்தில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். முதல்முறையாக சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்திருக்கிறார். ஆகையால் ஒரு சிறப்பான சம்பவமாக கருப்பு டீசர் அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் மூலம் சூர்யா தியேட்டரில் நீண்ட வருடத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கருப்பு டீசர் இப்போது இணையத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.