சினிமா வாய்ப்பு தேடும் அறிமுக நடிகைகள் பலருக்கும் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக வேண்டும் என்ற கனவு இருக்கும். அதற்காகவே பல முயற்சி எடுக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படித்தான் பிரபல நடிகை ஒருவருக்கு முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்கிறது.
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் சமீரா ரெட்டி. ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிக்க தொடங்கிய இவருக்கு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் மேக்னா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகளும் குவிந்தது.
அதைத்தொடர்ந்து இவர் தமிழில் வேட்டை, அசல், வெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். தற்போது 44 வயதாகும் சமீராவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களாக நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் இப்போது விளம்பர படங்களில் நடித்துக் கொண்டே குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பல படங்களின் ஆடிஷனில் ஆர்வமாக கலந்து கொள்வாராம். அப்படித்தான் பிரபல தெலுங்கு ஹீரோவான மகேஷ்பாபுவின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆடிசன் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் சமீராவும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாராம்.
ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. தனக்கு பிடித்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் இவர் அழுது கொண்டே வீடு திரும்பியிருக்கிறார். அதன் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் பிரபல வாட்ச் கம்பெனியில் இவர் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடம் வரை அவர் அந்த கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறார்.
அதன் பிறகு மீண்டும் அவருக்கு நடிப்பு ஆர்வம் தலை தூக்கவே வாய்ப்புகளுக்காக முயற்சி செய்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் அவருக்கு ஒரு இசை ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்திருக்கிறது. இப்படித்தான் அவர் தன்னுடைய கேரியரை ஆரம்பித்திருக்கிறார். மேலும் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் தவறவிட்ட அந்த வாய்ப்பு ஹிந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு சென்றது என்பது கூடுதல் தகவல்.