மீண்டும் இணையப் போகும் சூர்யாவின் வெற்றி கூட்டணி.. உறுதி செய்த ஜிவி பிரகாஷ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் நந்தா, பிதாமகன் படங்களை இயக்கிய பாலா மீண்டும் சூர்யாவை வைத்து இயக்க உள்ளார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த படம் சூரரைப்போற்று. இப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இப்படம் சிம்ப்ளி ஃப்ளை எ டெக்கான் ஒடிஸி ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

சூரரைப் போற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா சூர்யா ஜிவி பிரகாஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த வருடத்தின் இறுதிக்குள் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஜிவி தெரிவித்தார். சுதா கொங்கரா தற்போது சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக்கை செய்து வருகிறார்.

இப்படம் முடிந்த உடன் சுதா கொங்கரா சூர்யாவுடன் புதிய படத்தில் இணைய உள்ளார். இதனால் சூரரைப்போற்று படத்தைப் போன்ற ஒரு மிகப் பெரிய சூப்பர் ஹிட் படம் உருவாக உள்ளதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.