16 ஆண்டுகள் கழித்து இணையும் ரியல் ஜோடி.. வெறித்தனமான கதையோடு காத்திருக்கும் பாலா

சூர்யா தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து அவரது ரசிகர்களை ஹாப்பி மூடில் வைத்து இருக்கிறார். அதனை கெடுக்காமல் தொடர்ந்து படங்களை தேர்வு செய்வதில், கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் பாலா மற்றும் சூர்யாவின் சூப்பர் கூட்டணியில் அடுத்த படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் வெகுகாலம் கழித்து பிதாமகன், நந்தா படங்களுக்கு பிறகு, சூர்யாவும் இயக்குநர் பாலாவும் இணைய இருக்கின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த படத்தில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் சூரியாவின் மனைவியாக இருக்கக்கூடிய ஜோதிகா அவர்கள் வெகு காலம் கழித்து இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. 90% இந்த செய்தியானது உறுதியாகி விட்டதால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் ஆரம்பித்து இருக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஆக ஒரு பிரம்மாண்டமான செட் மதுரையில் போடப்பட்டு வருகிறது. எப்போதும் உண்மை பிறழாமல் கதையில் லாஜிக் தவறாமல் படத்தை எடுக்க கூடியவர் இயக்குனர் பாலா. அதனால் படத்தில் போடக்கூடிய செட் அனைத்தையும் தனி கவனம் செலுத்தி பார்த்துக் கொள்வார்.

இயக்குனர் விஜய் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் திரைப்படத்தின் செட்டுகளை அலங்கரித்த கலை இயக்குனர் மாய பாண்டி தான் இந்த படத்திற்கும் செட் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் . இவரின் பணிகள் தொடர்ந்து சிறப்பாக இருப்பதால் இவரை இயக்குனர் பாலா தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, முதலில் சூர்யாவை வைத்து சூர்யா தோன்றும் காட்சிகள் அனைத்தையும் முடித்து விடலாம் என்று படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதை மகிழ்வோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சூர்யா என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன் என்று பதிவிட்டு இருந்தார். இதிலிருந்தே பாலாவின் இயக்கம் சூர்யாவின் திரை வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த படத்தில் நடிப்பதாக இருக்கக்கூடிய நடிகை ஜோதிகா மிகவும் பிஸியாக இருப்பதால் அவர் வரும் காட்சிகள் மற்றும் சூர்யாவுடன் ஜோதிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இனிமேல்தான் படமாக எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடித்து வெகுகாலம் ஆகிவிட்டது. 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு சூர்யாவும், ஜோதிகாவும் இணையும் படமாக இந்த படம் உள்ளது. வெகு காலமாக நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கக்கூடியவர்,