வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கும் சூர்யா.. ரோலக்ஸ் பின் ஜெட் வேகத்தில் பறக்கும் கங்குவா

Actor Surya: சூர்யா கிட்டத்தட்ட 40 படங்களுக்கும் மேல் நடித்து முன்னணியில் இருந்தாலும் இவருடைய மார்க்கெட் ரேட் அதிகரித்தது ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த பின்பு தான். அத்துடன் இவரின் புகழாரம் எல்லா பக்கமும் ஜெட் வேகத்தில் உயர ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

இதைத்தொடர்ந்து இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின் இதற்கான எதிர்பார்ப்புகள் இன்னும் கூடுதலாக இருக்கிறது.
இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா மிகப் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. இக்கதையின் மேல் சூர்யா மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார். இதற்கு அடுத்து இப்படத்திற்கான அப்டேட் குறித்து சூர்யாவின் பிறந்தநாள் அன்று அடுத்த மாதம் மிகப் பிரமாண்டமான டீசர் வெளிவர இருக்கிறது.

ஏற்கனவே இவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்ப்பதற்கு ரொம்பவே வித்தியாசமாக புதுவிதமான கெட்டப்புடன் களம் இறங்கி இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் இவிபி இல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. அங்கே இப்படத்திற்கான பிரம்மாண்டமான அனைத்து செட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செட்டில் எட்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின்பு மறுபடியும் சில பீரியட் போர்ஷன்களுக்காக மொத்த டீமும் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார்கள். இப்படி இப்படத்திற்கான அனைத்து வேலைகளும் கொடைக்கானல் மற்றும் சென்னை என்று மும்மரமாக நடைபெற்று வருகிறது.

கூடிய விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தையும் முடித்து அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். அத்துடன் இப்படம் இவர் இதுவரை பெறாத லாபத்தை பெற்று கொடுக்கும் என்ற நம்பிக்கையில் முழுமூச்சுடன் இறங்கி நடித்து வருகிறார். இதனால் இதை கொண்டாடுவதற்காக இவருடைய ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.