அடுத்த தேசிய விருதுக்கு ரெடியாகும் சூர்யா.. மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

சமீபகாலமாக சூர்யா நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தேசிய விருதுக்கு சூர்யா தயாராகி வருகிறார். அதாவது ஞானவேல் இயக்கத்தில் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ஜெய் பீம்.

அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை இந்த படத்தை கொண்டாடினார்கள். இப்படம் பழங்குடி மக்களின் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்த ரசிகர்களின் கண்களில் கண்ணீர் தரைதாரையாய் வழிந்தது.

ஜெய் பீம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை என்று பலரும் கூறி வந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா, ஞானவேல், 2d என்டர்டைன்மென்ட் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கான கதையை கேட்டு சூர்யா ஓகே சொல்லிவிட்டாராம்.

தற்போது இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே சூர்யா வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். இந்த சூழலில் மீண்டும் ஜெய் பீம் கூட்டணியில் சூர்யா இணைந்துள்ளது அவரது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.