பாலா வேண்டாம் அவரை கூப்பிடுங்க என தஞ்சமடைந்த சூர்யா.. யாரும் எதிர்பார்க்காத அடுத்த கூட்டணி

வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியது பற்றிய செய்தி தான் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. சில மாதங்களாக கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த பாலா, சூர்யா இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்துள்ளனர். இதற்கு பாலா தான் முக்கிய காரணம் என்று அனைவருக்குமே தெரியும்.

இதை அடுத்து அந்த திரைப்படத்தில் வேறு எந்த ஹீரோ நடிப்பார் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. அதில் அதர்வா, ஆர்யா ஆகியோர் நடிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் சூர்யா விரைவில் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். தற்போது சிறுத்தை சிவா திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அந்த திரைப்படம் பல மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. ஆனால் அந்த படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதற்குள்ளாகவே சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் சூர்யா ஹரியின் இயக்கத்தில் ஆறு, சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிங்கம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பாகங்களாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த கூட்டணி அருவா திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைய இருந்தனர்.

ஆனால் சூர்யா அப்போது பிசியாக இருந்தால் காரணத்தினால் இந்த படம் தொடங்குவது பற்றி எந்த முடிவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பாலா மீதுள்ள அப்செட்டால் ஹரியை சந்தித்து இந்த படத்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி பேசி இருக்கிறார். சிங்கம் 3 படத்திற்கு பிறகு 5 வருட இடைவெளியில் ஹரியின் யானை படம் சமீபத்தில் வெளிவந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த திரைப்படத்திற்கு பின் ஹரியின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருவா திரைப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்க்காத இந்த கூட்டணி தற்போது மிகப்பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.