வெறுப்பின் உச்சத்தில் இருந்த சூர்யா.. ஒரு சம்பவத்தை சொல்லி குளிர வச்ச தேசியவிருது இயக்குனர்

Actor Surya: சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்தபடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆனால் சூர்யா இப்போது ஒரு வெறுமையில் இருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே பாலா உடன் கூட்டணி போட்ட வணங்கான் படம் பாதியிலேயே டிராப்பானது.

அதன் பிறகு கங்குவா படத்தில் நடித்து வந்தாலும் இப்படம் ரசிகர்களை கவருமா என்ற சங்கடம் மனதில் இருக்கிறது. அதுமட்டுமின்றி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆகையால் இப்போது முக்கிய முடிவு ஒன்றை சூர்யா எடுத்திருக்கிறார்.

அதாவது ஏற்கனவே சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்தது சூரரைப் போற்று. இப்படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது. இந்த சூழலில் சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இந்தச் செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூரரைப் போற்று படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

அதேபோல் சூர்யா 43 படமும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறதாம். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. ஏற்கனவே சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷ் தேசிய விருது பெற்றிருந்தார்.

இந்த சூழலில் மீண்டும் சூப்பர் ஹிட் காம்போ இணைந்துள்ளது. கண்டிப்பாக இப்படத்தின் வெற்றி 100% என ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

இப்போது சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆகையால் விரைவில் சூர்யா 43 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மீண்டும் ஜெயிச்சிட்ட மாறா என்று ஆர்ப்பரிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.