சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பதாக திட்டமிட்ட படம் “வாடிவாசல்”.
வெற்றி மாறன் இப்போது “விடுதலை” என்கிற பெயரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சூரி கூட்டணியில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படம் எடுக்கவிருக்கிறது என பேச்சு வந்தாலும்.
சூர்யா அடுத்தடுத்த படங்களுக்காக கால்ஷீட் ஒதுக்கி வருகிறார். நிலமை இப்படியாக இருக்கு கலைப்புலி தாணு சமீபத்தில் நடந்த வேறொரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியபோது.

வாடிவாசல் கோவிட் படப்பிடிப்பு தடை காரணத்தால் காலதாமதம் ஆனதாகவும். விரைவில் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளது என்றும் பாகுபலி படம் அளவிற்கு பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுருப்பதாகவும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
வெகு நாட்களாக “வாடிவாசல்” படம் பற்றி அப்டேட் ஏதும் இல்லாம்ல் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த அப்டேட்டே இப்போது கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும்.