Surya : ரஜினி கமலுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ அதைப் போன்று தான் தற்போது தமிழ் சினிமா உலகிலும் சூர்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டங்கள் குவிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது திறமையை காட்டிய பிறகு தான் சூர்யா இந்த ஒரு உச்ச நிலைக்கு வந்துள்ளார். அவர் பிறந்தநாள் அன்று ரசிகர்கள் கூட்டம் அவர் வீட்டின் முன்பு திரண்ட போது சிறிதும் கூட தயக்கம் காட்டாமல் வெளியில் வந்து சிறிது நேரம் ரசிகர்களுடன் நேரம் செலவிட்டார் சூர்யா.
2020 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வெளிவந்து மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. ஒரு பின் தங்கிய கிராமத்தில் நெடுமாறன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து வரும் சூர்யா. விமானத்தில் போக வேண்டும் என்ற ஏழைகளின் கனவை நிறைவேற்றுகிறார்.
இந்தத் திரைப்படம் பயங்கரமான வரவேற்பை கொடுத்தது. இதே போல் சூர்யாவின் தோற்றமும் ரசிகர்களின் மத்தியில் ஓர் இடத்தை பிடித்தது. அவர் உடம்பு அளவிலும் சிறிது மாற்றம் அப்போது தென்பட்டது. சில வருடங்கள் கழித்து ஆர்யா தனது பேட்டியில் சூர்யாவை பற்றி கூறியிருப்பது ரசிகர்களை உறைய வைத்துள்ளது.
ஆர்யா கூறியதாவது ” சார் எப்படி டயட் மெயின்டன் பண்றீங்க என்று கேட்டதற்கு, நான் இரண்டு மாதங்களுக்கு வெறும் வெள்ளரிக்காய் மட்டும்தான் சாப்பிடுகிறேன் என்று பதில் கூறினார் சூர்யா. அப்போது நான் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தேன்- ஆர்யா”.
சமீப பேட்டியில் ஆர்யா சூர்யாவை பற்றி பேசியது வலைத்தளத்தில் வெகுவிரசலாக பரவி வருகிறது. வெறும் வெள்ளரிக்காய் மட்டும் சாப்பிட்டு எப்படி சூர்யா அந்த திரைப்படத்தில் நடித்தார் என்று பலரும் தங்களது கருத்துக்களை வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.