பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்ஸி, வெளிப்படையான கருத்துகளை பேசுவதாலும், துணிச்சலாக செயல்படுவதாலும் அனைவராலும் கவனிக்கப்படுகிறார். இவரது திருமணம் எப்போது என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் இது குறித்து வெளிப்படையாக பேசிய டாப்சி, நான் வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிக்கும் நிலை எப்போது வருகிறதோ, அப்போதுதான் திருமணம் செய்துக்கொள்வேன் என கூறியிருந்தார்.
மேலும் என் பெற்றோர் நான் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை தேர்வு செய்ய மாட்டேன். அவர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதனை நான் எதிர்க்கவும் மாட்டேன். இதுவரை நான் யாரை காதலித்தேனோ, யாரை டேட் செய்தேனோ அதனை வெளிப்படையாக என் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறேன்.

திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் இருந்தால் மட்டுமே நேரத்தையும், சக்தியையும் செலவிட வேண்டும். அது ஒன்றும் பொழுதுபோக்கு அல்ல. டைம் பாஸ் செய்வதில் எனக்கு விருப்பமும் இல்லை என கூறியுள்ளார்.
டாப்ஸி தற்போது டென்மார்க்கை சேர்ந்த மதியாஸ் போ என்ற பேட்மிட்டன் வீரரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்குமான உறவு குறித்து பலமுறை டாப்சி வெளிப்படையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமணம் குறித்து டாப்சி பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.