கதை நல்லாருந்தா எல்லாத்துக்குமே ரெடி.. ஆஃபர் விட்ட தமன்னா, அள்ளிகொண்ட தயாரிப்பாளர்கள்

சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி சீரியல் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு புதிய ஆஃபர்களை கொடுத்துள்ளாராம் நயன்தாரா.

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதன் பிறகு விஜய்யுடன் சுறா போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு பெரிதாக மார்க்கெட் கிடையாது.

மாறாக தெலுங்கில் தமன்னாவை கூட்டிக்கொண்டுபோய் அழகு பார்த்தனர். அதன்பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கவனத்தை பெற்ற தமன்னா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கமர்ஷியல் நாயகியாக வலம் வந்த தமன்னா கடந்த சில வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது வெப்சீரிஸ் போன்றவை பிரபலமாக இருப்பதால் அதிலும் கால் பதித்து வெற்றி கண்டுள்ளார். சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் என்ற திரில்லர் வெப்சீரிஸ் செம ஹிட் அடித்துள்ளது.

இதன் காரணமாக இனி நல்ல கதைக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என குறிப்பிட்டுள்ளார். அது கிளாமராக இருந்தாலும் சரி, பெட்ரூம் ரொமான்ஸாக இருந்தாலும் சரி, எல்லாத்துக்கும் சரிதான் என பச்சை கொடி காட்டியது தயாரிப்பாளர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளதாம்.

tamanna-cinemapettai-01
tamanna-cinemapettai-01